யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று(10) பாடசாலை அதிபர் செல்வரட்னம் பகிதரகுமார் தலைமையில் பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இதில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கான பரிசில்கள் பதக்கங்கள், சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் தவரட்னராசா சுஜீகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வல்லிபுரம் நின்மதிராசா ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் மற்றும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட பா. றோ. மருதநாயகம் முன்னாள் உப தபால் அதிபர் ஆகியோர் வழங்கி வைத்ததுடன் தொடர்ந்து பரிசில்களை வழங்க அழைக்கப்பட்ட மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின்செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

