அகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று(10) கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அகரம் கல்வி நிலையத்தின் பொறுப்பாசிரியர் நுபைர் மற்றும் செயலாளர் ரிக்காஸ் ஆகியோரின் ஏற்பாட்டில், கல்வி நிலையத்தின் ஸ்தாபகரும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கபூர் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கண்ணியமிக்க இப்தார் நிகழ்வில் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய அதிபர், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அனஸ், கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயலாளர் ஜிப்ரி, சாட்டோ சமூக அமைப்பின் தலைவர் அஸ்கர், ஈஸ்டர்ன் ஹார்ட்வெயார் உரிமையாளர் இர்சாத், அகரம் கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் நிறைவில், வருகை தந்து சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் கல்வி நிலையத்தின் சார்பில் பிரதேச சபை உறுப்பினர் கபூரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

