லொனக் மீனாட்சி தோட்டத்தை சேர்ந்த விஜயகுமாரிக்கு கெளரவிப்பு

லொனக் மீனாட்சி தோட்டத்தை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி விஜயகுமாரி, பல்வேறு தடைகளையும் தாண்டி சட்டத்தரணியாக பட்டம் பெற்றுள்ளார்.
அவரை கெளரவிக்கும் நிகழ்வு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் அம்பகமுவ பிரதேச கிளையின் இளைஞரணி தலைவர் பிரதாப் சிங் மற்றும் பிரதேச கிளையின் உப தலைவர் ரமேஷ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நடைபெற்றது.
இதன்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் ஜீவன் இராஜேந்திரனால் சட்டத்தரணி செல்வி விஜயகுமாரிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *