“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” – மாதிரி கிராமங்கள் அங்குரார்ப்பணம்

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலை திட்டம் 2026.
மேற்படி வேலைத்திட்டத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலானது மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இளம்குமுதன் தலைமையில் பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாதிரி கிராமத்திற்கான சமுதாய உற்பத்தித்திக் குழுவிற்கான கலந்துரையாடலானது 09ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சமுதாய உற்பத்தித்திறன் மாதிரி குழுத் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளரின் தலைமை உரையினைத் தொடர்ந்து16ஆம் திகதி அன்று மாதிரி கிராமத்திற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் அங்குரார்பண நிகழ்வு நடாத்துவது தொடர்பான கலந்துரையாடலாகவும் மேற்படி கிராமத்திற்கான சமுதாய மேம்பாட்டு திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலாகவும் அமைந்திருந்தது.
அந்த வகையில் மாதிரி கிராமத்திற்கான திட்டம் முன்மொழிவுகளாக மாதிரி குழுவினால் மூன்று திட்டங்கள் முன்மொழியப்பட்டன .
கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்கின்ற காரணத்தினால் குடிநீர் பெற்றுக் கொடுப்பது தொடர்பான திட்டம் முன்மொழியப்பட்டது. இதில் 50 குடும்பங்களுக்கு தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்புச் சபையின் மூலம் நீர் வழங்கல் விநியோகத் திட்டம் தொடர்பாக முன்மொழிவு செய்யப்பட்டது.
இரண்டாவதாக கிராமத்தில் மர முந்திரிகை பயிர்ச்செய்கை கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றது. இருந்த போதிலும் மர முந்திரி விதையினை அயல் கிராமங்களில் இருந்து வியாபாரிகள் பெற்று செல்கின்றனர் ஆனால் மரமுந்திரிகை பழத்தினை விற்பனை செய்ய முடியாத வண்ணம் துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர், ஆதலால் அப்பழத்தினை சேகரித்து அப்பழத்தின் மூலம் பழச்சாறு உற்பத்தி செய்வதற்கான இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வது தொடர்பான திட்ட முன்மொழிவு செய்யப்பட்டது.
மூன்றாவதாக கிராமத்திற்கான ஆலய மலசல கூடம் இல்லாமையால் பெரும் அசௌகரித்தை எதிர்நோக்குவதாகவும் ஆதலால் கிராமத்திற்கான ஆலயத்திற்கு மலசல கூட வசதி ஒன்று ஏற்படுத்துவது தொடர்பான திட்ட முன்மொழிவும் முன்மொழியப்பட்டது இருந்த போதிலும் மலசல கூடத்திற்கான திட்டம் பாரியதாக உள்ள காரணத்தினால் இத்திட்டத்தின் மூலம் மாத்திரமில்லாமல் மாதர் சங்கத்துடன் இணைந்ததாக இரண்டு சங்கங்களும் இணைந்து மலசல கூட பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக ஆலய மலசல கூடத்திற்கான திட்டமுன்மொழியவும் முன்மொழியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூன்று முன்மொழிவுகளையும் மாவட்ட செயலகத்திற்கு முன்மொழிவதாகவும் 16ஆம் திகதி அன்று பெயர் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் ஏற்பாட்டுக் குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் பகிர்ந்தழிப்பும் வழங்கப்பட்டு சமுதாய உற்பத்தித்திறன் மாதிரி குழு செயலாளரினால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டு பிற்பகல் 4:30 மணியளவில் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *