கல்குடா தொகுதி சிகையலங்கார நிலையங்களுக்கு புதிய நேரக் கட்டுப்பாடு

கல்குடா தொகுதியிலுள்ள சிகையலங்கார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, கல்குடா தொகுதி சிகையலங்கார சங்கத்தினால் வாடிக்கையாளர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
​சங்கத்தின் தீர்மானத்தின்படி, பொதுவாக அனைத்து சிகையலங்கார நிலையங்களும் வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் சனிக்கிழமை காலையே திறக்கப்பட வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வந்தது.
எதிர்வரும் பெருநாளை முன்னிட்டு, நிர்வாக சபையினால் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ​வரும் 13ஆம் திகதி
​காலை 11:00 மணிக்கு மூடப்பட்டு ​மீண்டும் அன்று மதியம் 2:00 மணிக்கு திறக்கப்படும்.
​விசேட தினங்கள் மற்றும் பெருநாள் காலங்களில் மாத்திரம் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதி சங்கத்தினால் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
“பொதுமக்களின் வசதி கருதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் நிலையங்களைத் திறக்க நிர்வாக சபை அனுமதி வழங்கியுள்ளது” என கல்குடா சிகையலங்கார சங்கத்தின் செயலாளர் சனூஸ் தெரிவித்துள்ளார்.
​ஆகவே, வாடிக்கையாளர்கள் இந்த நேர மாற்றத்தைக் கவனித்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *