“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் நேற்று(10) மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் தெட்ஷணகெளரி தினேஷ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச மகளிர், வைத்தியர் சுசிகலா பரமகுருநாதன், வைத்தியர் ரவிச்சந்திரன், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவிப் பிரதேச செயலாளர் இளம்குமுதனின் வரவேற்புரையுடன், பிரதேச செயலாளர் தெட்சண கௌரி தினேஷின் தலைமையுரையும் மண்முனைப்பற்று பிரதேச பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தலும் விற்பனை கண்காட்சி ஆகியன இடம்பெற்றன.
இதன்போது, கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பட்டிமன்றம் “பெண்களை கொண்டாடும் ஆண்கள் அதிகமாக உள்ளனரா குறைவாக உள்ளனரா” எனும் தலைப்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்து பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், மண்முனைப்பற்று மகளிர் சங்க அமைப்பு, மகளிர் மகாசங்கம் ஆகியவற்றினால் மண்முனைப்பற்றுக்கான சிறந்த மகளிருக்கான விருதினை பிரதேச செயலாளர் தெட்ஷணகெளரி தினேஷ்க்கு வழங்கி பொன்னாடை அணிவித்து கெரவிக்கப்பட்டது.
அத்துடன் மண்முனைப்பற்று சமுர்த்தி மகா சங்கத்தினால் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமாக இரண்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

