வளைகுடா யுத்தம்; உலக நாடுகளையே பாதிப்படையச் செய்துள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்

வளைகுடா யுத்தத்தினால் ஏற்பட்ட எரிபொருளின் விலை ஏற்றம் எமது நாட்டு மக்களையும் பாதிக்கக்கூடும் தற்போது அது உலக நாடுகளையே பாதிப்படையச் செய்துள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான தொழில் உபகரணங்கள் மட்டக்களப்பில் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் குறைந்தது 38 நாட்களுக்கு தான் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க முடியும். எதிர்வரும் காலங்களில் ஆறு மாதத்திற்கு தேவையான எரிபொருட்களை கையிருப்பு வைக்க வேண்டிய வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

இருப்பினும் எதிர்கட்சிகள் ஆட்சி அதிகாரங்களை தற்போது கேட்டு நிற்கின்றனர். எமது அரசாங்கம் ஜனாதிபதி இல்லை என்றால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டி எழுப்ப முடியாமல் போயிருக்கும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களது நிதிகளை கூட கடந்த அரசாங்கங்கள் கொள்ளையடித்திருந்தன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *