கார்மேல் பத்திமா கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் பாடசாலையின் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், சிரேஷ்ட புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் நேற்று(11) நடைபெற்றது.
இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட உதவி அரசுக் கணக்காய்வாளர் நாயகம் பட்குனன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வரணியா சாந்தரூபன் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி  லசந்த கழுவாராச்சி கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக திருநாகரன் மற்றும் கிருஷாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், புதிய மாணவர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக சின்னங்கள் சூட்டப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *