சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமத்தின் மூலம் ஒரு பசுமையான தொழில் முனைவோரை உருவாக்குவோம்” எனும் தேசிய செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் புவனேந்திரனின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) இடம்பெற்றது.

“கிளின் ஸ்ரீலங்கா ” தேசியத்திட்டத்தின் மூலம் நெறிமுறைக் கொள்கைகள், தூய்மையான பௌதீக சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் தினங்களில் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தின் மூலம் ஒரு பசுமையான தொழில் முனைவோரை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்திட்டம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

கிராம மக்களின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வுகள், பொது இடங்களை  தூய்மை செய்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மேலும் சமூகத்தின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் எமது நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகலில் கிளீன் ஸ்ரீ லங்கா  தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் பேபியன் பாத்திலட் மற்றும் மாவட்ட உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் புவனேந்திரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *