மாமாங்கப் பிரதேசத்தில் இன்று(13) டெங்கு களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ச்சியாக ஏற்பட்ட மழை அனர்த்தத்திற்குப் பிற்பாடு எமது பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றனர்.
வழிந்து ஓடாத வெற்றுக் காணிகள், குடியிருப்புக்கள் போன்ற நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்து வருகின்றது.
இதனை துப்பரவு செய்யும் நோக்குடன் இன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து குறித்த களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன,


