போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட தங்க நகைகளை அப்புறப்படுத்த உதவியதாகக் கூறப்படும் மன்னாரைச் சேர்ந்த 66 வயது பெண் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 மற்றும் 2023 க்கு இடையில் தென்னிந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவியின் தாயாரான சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய ஒருவர் பணம் சம்பாதித்து இரண்டு மாடி வீடு, ஐந்து கடைகள் கொண்ட வீடு, ஒரு வாகனம் மற்றும் சுமார் 360 சவரன் தங்க நகைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
தங்கப் பொருட்கள் அடகு வைக்கப்பட்டு பின்னர் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் ஆர்ரம்பித்தது.
சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்ட பின்னர், மேற்கண்ட இரண்டு வீடுகள் மற்றும் வாகனம் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தங்கப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணையின் போது, சந்தேக நபரின் மனைவியின் தாயார் பல நிதி நிறுவனங்களில் தங்கத்தை அடகு வைத்து பின்னர் மன்னார் பகுதியில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்றது தெரிய வந்தது.
அதன்படி, தங்கப் பொருட்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டவை என்பதை அறிந்து, அவற்றை அடகு வைத்து விற்பது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இந்தக் குற்றங்களுக்கு உதவியமை தொடர்பாக, சந்தேக நபரின் மனைவியின் தாயார் நேற்று மன்னாரில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மன்னாரில் வசிக்கும் 66 வயதுடையவராவார்.
பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

