வனஜீவராசிகள் திணைக் களத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளிநொச்சி எல்லைப்பகுதியான விசுவமடு தொட்டியடி பகுதியில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளையும் சேதப்படுத்தி முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு செல்கின்ற நடவடிக்கை தொடர்கின்றது.
இந்நிலையில் இன்று(16) இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவதற்காக தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட முதிரைக் குற்றிகளும் மூன்று உழவு இயந்திரங்களும் வனஜீவ ராசிகள் திணைக்களத்தினர் இன்று மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

