தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதிப்பத்திரம் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக அன்று அதிகாலை 3.00 மணியளவில் தர்மபுரம் பொலிஸாரின் திடீர் வீதிச் சோதனை மூலம் 40 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலைமரக்குற்றிகள் புளியம்பொக்கனை பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் தடயப்பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

