ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று20) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும், ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்.

