புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில் இன்று(21) நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி கலீலுர் ரஹ்மான் (ஸலபி) நிகழ்த்தினார்கள்.
கல்முனை பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

