மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வு இன்று(21) மருத நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.

 

இதன்போது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளர் அருட் கலாநிதி நிசாந்தன் தலைமை உரையாற்றினார்.

 

கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிஹான் டிலங்க வாழ்த்துரை நிகழ்த்தினார்.

 

இருவரது உரையின் போது இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகும் செயற்பாட்டினை கட்டுப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.

 

மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அரங்கை கவர்ந்திருந்தது.

 

நிகழ்வில் வாலிபப் பிள்ளைகளுக்கான, பெற்றோர்களுக்கான பணியாளருக்கான, விருந்தினர்களுக்கான என பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றன..

 

இதேவேளை நிகழ்வில் முதன் நிகழ்வாக இன்று அதிகாலை ஆண்களுக்கான மரதன் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன.

 

போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

 

நிகழ்வில் பிரதேச சர்வமத குருமார்கள், பிரதேச கிராம சேவகர் பிரபு, பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *