சட்டவிரோதமாக கலன்களில் வைத்திருந்த டீசலுடன் ஒருவர் கைது

அம்பாறை ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமாக கலன்களில் 800 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்;த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றிவரும் ஒருவரை நேற்று முன்தினம்(22) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

 

பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சம்பவதினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் கலன்களில் 800 லீற்றர் டீசல் நிரப்பபட்டு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

 

இதில் அங்கு கடமையாறிவரும் இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *