மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (2026.03.23) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிராமசேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள்தொடர்பான இத்திட்டம் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் இடம் பெற்று வருகின்றது.
இச்செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள், பாடசாலை பிரதிநிதிகள், பொலிஸ் நிலைய உத்தியோத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ மாது, விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின் வளவாளராக மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி. மதிராஜ் கலந்து கொண்டு அவசியமான வளவாண்மையை வழங்கினார்.
புகலிடம் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியதுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம. புவிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

