மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி விற்பனை கூடம்

மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய  மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன.
மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தேசிய   தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமாரி அவர்களின்  ஏற்பாட்டில் இன்று (26) இடம் பெற்றது.

இக்கண்காட்சியில்
ஏராளமான பொதுமக்கள் விற்பனை கண்காட்சியை பார்வையிட வந்ததுடன்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.

இப் பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்துவதற்கு  மாவட்ட செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *