கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வருடாந்தம் நடைபெறும் பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
குறித்த பரிசோதனை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்ககுணசேகர பொலிஸ் பரிசோதனையை முன்னெடுத்திருந்தார்.
குறித்த பரிசோதனையின் போது பொலிஸாரின் சீருடைகள், அவர்கள் பயன்படுத்தும் அரச வாகனங்கள் மற்றும் பொலிஸார் பயன்பாட்டிலுள்ள அரச சொத்துக்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

