யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீதியில் கொண்டப்பட்ட மணலை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களில் செல்வோர் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இரவு வேளைகளிலும் மற்றும் தூர இடங்களிலிருந்தும் செல்கின்றவர்கள் வீதியில் கொட்டப்பட்டு காணப்படும் மண்ணின் மேலால் மோட்டார் சைக்கிள்களை செலுத்துகின்றபோது சறுக்கல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்
இது தொடர்பான விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக அக்கறையுள்ள பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

