மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் சித்திரத்தேர் தேரோட்டமானது சிவாச்சாரியார்களின் விசேட பூசை நிகழ்வு டனும் அரோகரா கோசத்துடனும் ஆரம்பமாகின.
ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேரானது விபுலானந்த பாடசாலை வீதி வழியாக வந்து கல்குடா பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
வீதியின் இருமருங்கிலும் அடியார்கள் அழகிய தோரணங்களைக் கட்டியும் பூரண கும்பங்கள் வைத்து சுவாமியை பிரார்த்தித்தனர்.
சிவனுக்கு ஓர் சித்திர தேர் அமைத்து அதில் சுவாமியை அமர்த்தி அழகு பார்த்து ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்து வரவேண்டும் என்ற அடியார்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.
இதற்காக ஆலய தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் சிவனடியார்கள் அயராத முயற்சி எடுத்திருந்தனர். இதேவேளை மேற்படி ஆலயத்தின் மஹோற்சவ விழா கடந்த 23.03.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரத்தோற்சவம் நடைபெற்றது.


