சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலிருந்து பல்கலை தெரிவாகிய மாணவிக்கு பாராட்டு

2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் கலைப்பிரில் தோற்றி 2.0706 என்ற வெட்டுப் புள்ளியுடன் அம்பாறை மாவட்டத்தில் 5 ஆவது இடத்தைப் பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவி எம்.ஏ.எப்.அனாபானாயும் அவருடன் இணைந்து சித்தியடைந்த ஏனைய  மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் இன்று(02) இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவிக்கான பரிசில்களை FSD இன் அனுசரணையில் அதன் தலைவரும் சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளருமான ஆதம்பாவா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்ததுடன் குறித்த பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற ஏனைய மாணவிகளான எம்.ஆர்.எப். ராசிபா, ஜே.ஜீ.எப். ரீஹா ஆகியோரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் உட்பட பகுதித் தலைவர் யூ.கே.எம். முபாறக் மற்றும் உதவி, பிரதி அதிபர்களும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவி எம்.ஏ.எப். அனாபா, க.பொ. த சாதாரணப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஒரு சாதனையாளர் என்பதுடன் கடந்த வருட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளியுடன் ஒப்பிடும் போது இம்மாணவியின் வெட்டுப் புள்ளியானது கொழும்புப் பல்கலைக்கழத்தின் சட்ட பீடத்திக்கு தெரிவாவதற்கான அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் உயர்தரத்திற்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், உதவி அதிபர்கள் மற்றும் சாதனை மாணவியின் பெற்றோர்கள் ஆகியோருடன் உயர்தர மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *