“அன்புள்ள அம்மாவிற்கு ஒரு (கவி) சிரிப்பு” நூல் வெளியீடு

பரமேஸ்வரி பரராஜசிங்கம் ஞாபகார்த்தமாக தென்புலோலியூர் பரா. ரதீஸ் எழுதிய “அன்புள்ள அம்மாவிற்கு ஒரு (கவி) சிரிப்பு” எனும் நூல் வெளியீடு பேராசானும், அகில இலங்கை இளங்கோ கழக ஆலோசகரும், ஓய்வு பெற்ற பிரதி அதிபருமான  சிவலிங்கம் தலைமையில் பிற்பகல் 3:00 மணியளவில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு  அமரர் பரமேஸ்வரி பரராஜசிங்கமின் திரு உருவப் படத்திற்கு  ஓய்வு பெற்ற பிரதி அதிபர் தனலட்சுமி இராசரத்தினம் சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து  விருந்தினர், உறவினர்கள் மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இறை வணக்கத்தினை  வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் நிகழ்த்தினர்.

வரவேற்புரையினை ஹாட்லிக் கல்லூரி பிரதி அதிபர் வாணிமுகுந்தன் நிகழ்த்தினார்.

தலைமையுரையினை நிகழ்வின் தலைவர் பேராசான். சிவலிங்கம் ஆற்றினார்.

நினைவுரையினை கோப்பாய் ஆசிரியர் கலா சாலை விரிவுரையாளர் தகுநய மொழியருவி வேல். நந்தகுமார் ஆற்றினார்.

வெளியீட்டுரையினை கிருஷ்ணலதா குலசங்கர் நிகழ்த்தினார்.

நூலினை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கணக்காளர்  தனிகாசலம் சிவதாசன் வெளியீடு செய்து வைக்க முதற்பிரதியினை அளவையியல் பொறியியலாளர் திரு, திருமதி க.அருண்பிரசாத்,

திருமதி. உஷாந்தினி அருண்பிரசாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூல் மதிப்பீட்டு உரையினை கோப்பாய் ஆசிரிய கலா சாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை தணிகாசலம் சிவதாசன் நிகழ்த்தினார்.

நன்றியுரையினை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ஆசிரியர்  திருமதி. றாதிகா கிருபாகரன் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து

ஆணின் பெருமைக்குப் பெரிதும் காரணம்

தாயா! தாரமா எனும் தலைப்பில் பரா ரதீஸ்  தலைமையில்  பட்டிமன்றம் இடம்பெற்றது. குறித்த புத்தகத்தினை அகில இலங்கை இளங்கோ கழகம் வெளியீடு செய்தனர்.

இந் நிகழ்வில் வலம்புரி பத்திரிகை பிரதம ஆசிரியர் விஜயசுந்தரம், கோப்பாய் ஆசிரியர் கலா சாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி லலீஷன், விரிவுரையாளர் வேல் நந்தன்,  ஹட்லிக் கல்லூரி அதிபர், பிரதி அதிபர், இலக்கியவாதிகள், தென் புலோலியூர் மக்கள், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  அமரர் திருமதி. பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்களது பிள்ளைகள், மருமக்கள், பேர பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *