ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் கருத்தாடல்

இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் அரங்கு மிக சிறப்பாக ஆரம்பமானது

 

 

இவ் நிகழ்வானது திரு கருணாகரன் எழுத்தாளர் மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர் தலைமையில் நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் உறவுகளுக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத்தலைவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது

 

 

 

இவ் நிகழ்வில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் எண்ணக்கருவில் தமது கருத்துக்களை திரு இரேனியஸ் செல்வின் ஓய்வு நிலை மூத்த நிர்வாக அதிகாரி அவர்களும் மற்றும் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார் அவர்களும் திரு பெரியசாமி முத்துலிங்கம் சமூக ஆய்வாளர் அவர்களும் B.திசாநாக்க கொள்கை பகுப்பாய்வாளர் அவர்களும் மற்றும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களும் மற்றும் திரு வீரசக்தி தனபாலசிங்கன் மூத்த ஊடகவியலாளர் அவர்களும் தமது கருத்துக்களை வழங்க உள்ளனர்

 

 

இவ் கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *