மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுத்தன் பங்கு பற்றுதலுடன் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவி பணிப்பாளர் எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) இடம் பெற்றன.
மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று தெற்கு, மண்முனை தென்மேற்கு, கோறளைப்பற்று மத்தி, மண்முனை தென்எருவில் பற்று, மண்முனை பற்று, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர் பற்று, காத்தான்குடி
ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அரச காணிகள் மற்றும் அரச கட்டிடங்களை பயன்படுத்துவதற்கான அனுமதிகள் கலந்துரையாடப்பட்டு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், காணி பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர்கள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது மாவட்ட பயன்பாடடு குழுவினால் வழங்கப்பட்ட காணிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால்
காணிகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

