கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய புல்லுமலை பகுதியில் இன்று(11) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கொண்ட குழுவொன்றை கரடியனாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
நவரெத்தினராசா முகாக்கினி

