கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடமுருட்டி ஆறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் மூலம் அனுமதி பத்திரம் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

