மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெலிகந்த, மருதங்கடவல பகுதியில் இன்று (12) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் வெலிகந்த மற்றும் ரத்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 55 வயதுடையவர்களாவர்.
கவனக்குறைவாகச் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றே இந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

