சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி றோயல் பொது விளையாட்டு மைதானத்தில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழுக்கு மரம் ஏறுதல் தலையணை சண்டை கிடுகு பின்னுதல் தேங்காய் திருவுதல் போட்டி இன்னும் பல்வேறு வகையான விளையாட்டுகளுடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்றது.

