நேற்று(16) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புரவுன்சீக் தோட்டம், ராணி தோட்ட பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி காணாமல் போனது தெரியவந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்த்தேக்கத்தின் கரைப்பகுதியில் அவரது பாதணிகள் காணப்பட்டுள்ளன.
இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட தீவிர தேடுதலின் மூலம், பின்னர் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

