நுவரெலியாவில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவை 51ஆம் கம்பி எனும் பகுதியில் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து காரொன்று விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று(17) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

 

பலாங்கொடை பகுதியிலிருந்து வந்த கரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் பலியாகியுள்ளதுடன், காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

 

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *