மட்டக்களப்பில் பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பிள்ளையான் வெலிசறை சிறைச்சாலையில்  சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டார்கள் கறுப்புப் பட்டியால் வாயைக்கட்டி அமைதியான கவனயீர்பு போராட்டத்தில் இன்று (17) ஈடுபட்டனர்.

 

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டு காந்து பூங்காவில் ஒன்று திரண்டு வாயை மூடி கறுப்பு துணியால் கட்டி நிலத்தில் அமர்ந்தவாறு இலங்கை நீதிதுறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்துக்கு தீர்வு கொடுங்கள், மக்கள் தலைவனுக்கு கடுமையான சிறைச்சாலையா? சிறைச்சாலையை மாற்றிக் கொடு,

 

 

ஜனநாயகத்தை  நிலைநாட்டிய தலைவனுக்கு தடுப்பு காவல் சடங்களை பின்பற்றுவதில் என்ன, உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் சந்திரகாந்தனுக்கு தடுப்புகாவல் கைதிக்கு வசதிகளை வழங்கு மறறும் பிள்ளையானின் நிழல்படங்கள் ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஊடபங்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு போராட்காரர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *