நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் அதாவது 20 ஆம் திகதி முதல் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

 

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *