காரைதீவில் கலாசார விளையாட்டு விழா

பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான “ஒஸ்கார்” இணைஅனுசரணையில், மாபெரும் கலாசார விளையாட்டு விழாவை இன்று (18) நடாத்தியது.

 

அதன் மரங்களாக , இன்று காலையில் மரதன் ஓட்ட நிகழ்வு சிறப்பாக கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

சுமார் ஒரு மணிநேரம் ஊருக்குள் வலம் வந்த மரதன் ஓட்டம் காரைதீவு விளையாட்டு கழக தலைமையக முன்றலில் நிறைவடைந்தது.

 

கழகத் தலைவர் வை.கோபிகாந்த் தலைமையில் இடம்பெற்ற காலை நிகழ்வில், கழக போசகர்களான வி.இராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா, சி.நந்தகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மரதனை ஆரம்பித்து நிறைவு செய்தனர்.

 

கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டியை கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *