வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான லயன் பா.நிரோசனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு நேற்று (19) வாழைச்சேனை பிரதேசத்தில் பல்வேறுபட்ட சமூகப் பணிகள் வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது அவர் கடந்த காலத்தில் சமூகத்திற்கு ஆற்றிய மனிதநேய சேவைகள் தொடர்பான நினைவுரையாற்றப்பட்டதை அடுத்து தாக சாந்தி நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் கல்குடாவில் ” டித்வா புயலில் ” பெரிதும் சேதமுற்ற “நந்தவன பூக்கள்” முன்பள்ளிக்கான திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த முன்பள்ளியானது அமரர் லயன் பா.நிரோசனின் ஆலோசனையின் பேரில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் அதன் நிர்வாக நடவடிக்கைகள் யாவும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைய 306 D 10 மாவட்டத்திற்கான ஆளுநர் லயன் க.லோகேந்திரனிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான அபிவிருத்தி பணிக்காக சர்வதேச லயன்ஸ் கழக நிதி உதவியில் 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகள் யாவற்றிலும் 306 D 10 மாவட்டத்திற்கான ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் .வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.கார்த்திபன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

