கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் மே தினத்திற்கு அறைகூவல்

குறித்த ஊடக சந்திப்பினை கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் தலைவர்  இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேலனத்தின் செயலாளர் முத்து சிவ மோகன்
இளயாதம்பி விஜயசிங்கம் இயேசு ராஜன்
மீனவ சங்க பிரதிநிதி ரவீந்திரன் பெண்கள் அமைப்பின் பிரதிநிதி கலந்து கொண்டனர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் ஆவது எதிர்வரும் மே 01.05.2026 திகதி அன்றைய தினம் கிளிநொச்சி  மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் மீனவ சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் மே தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டி நிற்பதோடு  குறித்த மே தினம் தொடர்பாக சித்தரிக்கப்பட்ட ஊர்தி பவனிகள் கரடி போக்கு சந்தையில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி பசுமை பூங்கா வரை சென்றடைந்து அங்கு மே தின கண்டன கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மற்றும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக போக்குவரத்துவாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே அனைத்து தரப்பினரும் எதிர்வரும் முதலாம் திகதி 2.00 மணியளவில் கரடி போக்கு சந்திக்கு வருகை தந்து சிறந்த முறையில் மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்றைய தினம் வர்த்தக நிலையங்களும் அனைத்தும் மூடப்படும் எனவும் குறித்த ஊடக சந்திப்பின் ஊடாக தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *