தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 75, 064 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருக்கிறது. வாக்காளர்கள் தங்களுடைய தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று எளிதாக வாக்குப்பதிவு செய்யும் வகையில் பல வசதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்து இருக்கிறது.

 

234 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்-செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி- மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *