நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

 

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

 

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.

 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *