ஓட்டமாவடியில் பிரதேசத்தை ஒழுங்குபடுத்தும் “Future City” வேலைத்திட்டம்

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் அவர்களின் தலைமையில் “Future City” வேலலைத்திட்டத்தின் கீழ் பிரதேசத்தை ஒழுங்குபடுத்தும் செயற்பாடு இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

 

இதன் போது, ஓட்டமாவடி பிரதான வீதி தொடக்கம் ஓட்டமாவடி சந்தை, தபாலக வீதி, ஜும்ஆப்பள்ளிவாயல் வீதி, மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் வீதி என்பனவற்றில் போக்குவரத்து, சுற்றச்சூழலுல் மற்றும் பாதைசாரிகளுக்கு இடைஞ்சலாகக்காணப்பட்ட போக்குவரத்து தடைகள், வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்டதுடன், மனித நுகர்வுக்குப்பொருத்தமற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள், மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

அத்துடன், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுமானங்களை உடனடியாக அகற்றவும், நிரந்தரக்கட்டுமானங்களை அகற்ற கால அவகாசமும் வழங்கப்பட்டதுடன், பேக்குவரத்திற்கு இடைஞ்சலாக தொடர்ச்சியாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

 

அத்துடன், வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்களை கவனத்திற்கொள்ளுமாறும், சுத்தமான வகையில் சூழலைப்பேணுமாறும் தவிசாளர் கேட்டுக்கொண்டதுடன், பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் திடீர் கண்காணிப்புகள் இடம்பெறும் என்பதுடன் மீறுவேறுக்கெதிராகவும் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் இன்று முதல் தவிசாளரின் தலைமையில் ஓட்டமாவடி பிரதேசத்தை ஒழுங்குபடுத்தம் “Future City” வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

 

இதன் போது, தவிசாளரின் தலைமையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிசார், போக்குவரத்து பொலிஸார், பொதுச் சுகாதாரப்பரிசோதகர், சபையின் வருமானப்பரிசோதகர்கள், சபையின் மேற்பார்வையாளர்கள் அடங்கியகுழுவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *