மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15 வயதும் 9 மாதங்களும் ஆகும். வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
