இலங்கை வீராங்கனை தங்கப் பதக்கம் வென்று சாதனை

சீனாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

மற்போர் விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட நிபுணி வாசனா, இறுதிப் போட்டியில் #வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தார்.

 

ஆரம்ப சுற்றுகளிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிபுணி, தன்னம்பிக்கை மற்றும் திறமையால் இறுதிப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

 

இலங்கை விளையாட்டுத்துறைக்கு பெருமை சேர்த்துள்ள இந்த வெற்றி, சர்வதேச அரங்கில் இலங்கை பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளின் திறமையை மீண்டும் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நிபுணி வாசனாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *