அர்ச்சுனா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மல்லாகம் நீதிமன்றத்தில் அர்ச்சுனாவை இன்று (29) முற்படுத்திய போதே அவருக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவு வழங்கியுள்ளார்.

 

தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *