மேற்கு வங்க தேர்தல் – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (29) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

142 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்ற உள்ளனர்.

 

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக, கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *