அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்

கொழும்பு – மட்டக்களப்பு இடையே பயணிக்கும் ‘மீனகயா’ தொடருந்து சிற்றுண்டிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

 

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

 

சந்தையில் 1 லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாவாகும். எனினும், குறித்த வியாபாரி அதனை 160 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு போத்தலுக்கு 60 ரூபா மேலதிக இலாபம் ஈட்டியுள்ளார்.

 

இது தொடர்பான வழக்கு நேற்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதத்தை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *