தேசிய அம்புலன்ஸ் சேவை பிரிவினின் பணியாளர்கள் இருவர் மீது தாக்குதல்

நேற்று (01) அதிகாலை 1990 தேசிய அம்புலன்ஸ் சேவை பிரிவினின் பணியாளர்கள் இருவர் செல்வபுரம் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது.

 

நேற்று அதிகாலை 01 மணியளவில் மாங்குளம் சேவைக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய நோயாளியை ஏற்றுவதற்காக சென்றபோது குறித்த நோயாளியின் வீட்டில் இருந்தவர்களும் ஏனைய நபர்களும் குறித்த இரண்டு அவசர அம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்

 

இதன்போது தாக்குதலுக்குள்ளான அன்புடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

1990 இலக்க அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைய இரவு வேளையிலும் சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது

 

இவ்வாறான சம்பவங்கள் சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *