இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை இன்று உயர்வை சந்தித்துள்ளது.

 

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, டபள்யூரிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

 

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

 

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

அதன்படி, அதன் விலை 2.780 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *