பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03) இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில், இந்த மாத இறுதியளவில் மின்னலுடன் கூடிய மேகங்கள் உருவாகும் சாத்தியம் குறையக்கூடும் எனத் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

 

“இந்தக் காலப்பகுதியில் மேகங்கள் மூலமே மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. எனவே, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மின்சாதனங்களைப் பாதுகாப்பதற்கு, அவற்றை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பதே மிகவும் பொருத்தமானது என வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து பொதுமக்களுக்கு நினைவூட்டி வருகிறது.”

 

மின்னல் அனர்த்தங்களைத் தவிர்க்க, மழை பெய்யும் போது திறந்தவெளிகளான வயல்வெளிகள், திறந்த வாகனங்களில் பயணம் செய்தல் மற்றும் உயர்ந்த மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

அடுத்ததாக தென்மேற்கு பருவமழை காலம் மே 25 ஆம் திகதிக்கு பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காற்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசுவதால், மின்னல் மேகங்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். இடைப் பருவமழை காலத்திலேயே மின்னல் அபாயம் அதிகமாக இருக்கும் எனவும், பருவமழை தொடங்கிய பின் மின்னல் பாதிப்புகள் மற்றும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *