பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய பிலிப்பைன்ஸின் சமர் தீவில் இன்று (04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து கிழக்கு சமர் மாகாண அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தாமஸ் காம்போமனேஸ் தெரிவிக்கையில்,

 

“நிலநடுக்கம் ஏற்பட்டபோது நாங்கள் ஒரு பந்தைப் போல மேலும் கீழும் தூக்கி எறியப்பட்டது போன்ற உணர்வை எதிர்கொண்டோம்.

 

சில கட்டிடங்களில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இருப்பினும், பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.”

 

அந்த நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 800-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த அக்டோபர் மாதம் தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 07 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *