நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது. திணைக்களம்

 

வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் பூமத்திய ரேகையை நோக்கி காற்று வந்து குவிதல். இதன் காரணமாக நாளைய தினத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் மேகம் சூழ்ந்த வானிலை காணப்படும். இப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *